பஹல்காம் தாக்குதலை கண்டித்து காஞ்சி பா. ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
பஹல்காம் தாக்குதலை கண்டித்து காஞ்சி பா. ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்ட பா.ஜ., சார்பில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில், மாவட்ட பா.ஜ., தலைவர் ஜெகதீசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், மாநில செயலர் அஸ்வத்தாமன், பா.ஜ., நிர்வாகிகள், சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தான் மக்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உரையாற்றினர். 

தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள், காலாவதியான விசா வைத்திருப்பவர்கள் அல்லது விசா இடைநிறுத்தப்பட்ட அனைத்து பாகிஸ்தானியர்களையும் அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி