குன்றத்தூரிலிருந்து நந்தம்பாக்கம் சென்ற மூன்று பெண்கள், மதுபோதையில் இருந்த கார்த்திகேயன் மற்றும் சுமன் ஓட்டிய ஆட்டோவில் பயணம் செய்தனர். பெண்கள் இறங்க வேண்டிய இடம் வந்தும் நிறுத்தாமல் அதிவேகமாக ஓட்டியதால், பெண்கள் சத்தம் போட்டனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பொதுமக்கள் பெண்களை மீட்டனர். மதுபோதையில் இருந்த ஓட்டுநர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். குன்றத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.