அச்சிறுப்பாக்கத்தில் ஸ்ரீ ஐயப்ப சாமி ஆலய கும்பாபிஷேக விழா

85பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 17ஆம் தேதி தொடங்கிய இந்த விழா, இன்று காலை நான்காம் கால பூஜைகள் மற்றும் புனித நீர் ஊற்றும் நிகழ்வுகளுடன் நிறைவடைந்தது. விநாயகர், முருகன், ஐயப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஸ்ரீ ஐயப்பா சுவாமி சேவா சங்கம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியது.