வரதராஜபுரத்தில், அடையாறு ஆற்றின் கரை, 4.50 கோடி ரூபாய் செலவில் பலப்படுத்தப்பட்ட நிலையில், சமூக விரோத கும்பல் 'பொக்லைன்' இயந்திரம் மூலம் கரையை உடைத்து, 10 அடி ஆழத்திற்கு மண் அள்ளுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்பட அபாயம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.