மயிலிறகு மாலை அலங்காரத்தில் காட்சி அளித்த முருகப்பெருமான்

1பார்த்தது
மயிலிறகு மாலை அலங்காரத்தில் காட்சி அளித்த முருகப்பெருமான்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தை மாத செவ்வாய்க்கிழமையையொட்டி, ஏழு அடி உயரத்தில் கருவறையில் காட்சிதரும் முருகப்பெருமான் மரிக்கொழுந்து மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கந்த சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மயிலிறகு மாலை அலங்காரமும் நடைபெற்றது. மேலும், சண்முகருக்கு சத்ரு சங்கார திரிசதீ யாகமும் அர்ச்சனையும் நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி