மறைமலை நகரில் துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

99பார்த்தது
மறைமலை நகரில் துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் ரயில் நிலையம் அருகே மரத்தில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில், இறந்தவர் நந்திவரம் - கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த 35 வயதான வெங்கடேசன் என தெரியவந்தது. தைலாவரத்தில் மென்பொருள் நிறுவனத்தில் பிளம்பராக வேலை செய்து வந்த வெங்கடேசனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில நாட்களுக்கு முன் நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சென்றபோது, அது திருடு போனதால் மன உளைச்சலில் வெங்கடேசன் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி