காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகாவைச் சேர்ந்த கிராம ஊராட்சி செயலர் திருமலைசாமியை, துணை முதல்வர் உதவியாளர் என கூறி, தாமோதரன் என்பவர் 10,000 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்ததால், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திருமலைசாமி அளித்த புகாரின் பேரில், போலீசார் தாமோதரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.