மதுராந்தகம் சுற்றி உள்ள பகுதிகளில் விட்டுவிட்டு மழை

306பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வானம் இருண்டு மிதமான மழை மற்றும் சாரல் மழை பெய்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து, வெறிச்சோடி காணப்படுகிறது. சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து குறைந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி