செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நேற்று (மே. 18) நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு தின பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். ரூ. 10 லட்சம் கோடி கடன் இருப்பதை அறியாமல் தேர்தலில் போட்டியிட்டீர்களா என்றும், வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர் வழங்க ஈரானை கைப்பற்ற வேண்டும் என்றும், தான் சட்டமன்றத்திற்குள் நுழைந்திருந்தால் அனைவரும் வெளியே நின்றிருக்க வேண்டும் என்றும் சீமான் பேசினார்.