தாம்பரம்: பாலியல் வழக்கில் தலைமறைவானவர் அந்தமானில் கைது

453பார்த்தது
தாம்பரத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2014ல் கைது செய்யப்பட்ட கோவிந்தசாமி, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். கடந்த ஆண்டு மைசூரில் பிடிபட்ட இவர், மீண்டும் பிணையில் வெளிவந்து தலைமறைவானார். நீதிமன்ற உத்தரவின் பேரில், அவருக்கு தர்மபுரி மற்றும் அந்தமானில் இரண்டு மனைவிகள் இருப்பது தெரியவந்தது. தாம்பரம் காவல் உதவி ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விமானம் மூலம் அந்தமான் சென்று கோவிந்தசாமியை கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி