சோழிங்கநல்லூர்: ஓ. எம். ஆர். சாலை காரப்பாக்கம் பகுதியில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான எல்காட் நிறுவன வளாகத்தின் அருகே செயல்பட்டு வரும் டெக் மகேந்திரா தனியார் ஐ. டி. நிறுவனத்தில் இன்று (மே. 15) மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பழைய கம்யூட்டர், மானிட்டர், லேப்டாப், சேர், டேபிள் உள்ளிட்ட பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை வானளாவப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.