மதுராந்தகம்: அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து

52பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டவுடன் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் உள்ளூர்வாசிகள் தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்வாரியத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவ ஊழியர்கள் தீயணைப்பு உபகரணங்களை கொண்டு மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் அறையில் ஏற்பட்ட தீயினை அணைத்தனர். மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி