நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட சரத்குமார் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் திறப்பு விழா இன்று (மே. 18) சிட்லப்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சரத்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி, இனிப்புகள் வழங்கி தனது பணியினை துவக்கினார்.