மதுராந்தகத்தில் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் உட்பட இருவர் கைது

144பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஈசூர் கிராமத்தில், சிவராமன் தனது 15 சென்ட் நிலத்தில் மூன்று சென்ட் இடத்தை சிவம் தொண்டு நிறுவனத்திற்கு தானம் செய்ய முயன்றார். இதற்காக மதுராந்தகம் சார்பதிவாளர் கார்த்திகேயன் 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், இறுதியில் 15,000 ரூபாய்க்கு பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. பத்திரப்பதிவு அன்று 10,000 ரூபாய் லஞ்சம் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் கார்த்திகேயன் மற்றும் உடந்தையாக இருந்த பத்திர எழுத்தர் சிவா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you