செங்கல்பட்டு கல்லூரி வழியை மறைத்த டாஸ்மாக்

173பார்த்தது
செங்கல்பட்டு கல்லூரி வழியை மறைத்த டாஸ்மாக்
செங்கல்பட்டு மாவட்டம் கானத்தூரில், கல்லூரி அருகே விதிமீறி இயங்கும் டாஸ்மாக் கடையை மூடாமல் இருக்க, கடைக்காரர் நூதன முறையைக் கையாண்டுள்ளார். கல்லூரிக்குச் செல்லும் நேரடி வழியைத் தடுப்பு அமைத்து மறைத்து, மாணவர்கள் வேறு தெரு வழியாக சுற்றிச் செல்லும்படி செய்துள்ளனர். இதனால் தூரம் அதிகரித்து, விதிமுறையிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுபோன்ற மோசடிகள் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி, அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர்.