கணவருடன் ஸ்கூட்டரில் பெண் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

2பார்த்தது
கணவருடன் ஸ்கூட்டரில் பெண் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு
சுங்குவார்சத்திரம் அருகே, கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் மற்றும் நிவேதா தம்பதி, நேற்று முன்தினம் ஹோண்டாடியோ ஸ்கூட்டரில் திருமங்கலம் சென்றுவிட்டு, அன்றிரவு கோட்டூர் திரும்பிக் கொண்டிருந்தனர். வாலாஜாபாத் - கீழச் சேரி சாலையில் மொளச்சூர் அருகே சென்றபோது, அதே திசையில் சென்ற லாரி மீது ஸ்கூட்டர் உரசி இருவரும் கீழே விழுந்தனர். இதில் லாரி சக்கரம் நிவேதாவின் தலையில் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெகதீஷ் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி