காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாவிஷ்ணு, (24). இவர், கடந்த ஜூன் 26ம் தேதி, 'ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ்' பைக்கில், சோழனூரில் இருந்து செங்கல்பட்டுக்குச் சென்றார்.
அப்போது, மகாவிஷ்ணு பைக்கில் செங்கல்பட்டு அருகே சென்றபோது நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினார். இதைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், அங்கு, மகாவிஷ்ணு, நேற்று காலை, உயிரிழந்தார். சம்பவம் குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.