ஸ்ரீபெரும்புதூர்: சாலை தடுப்பில் மோதி இளைஞர் பலி

593பார்த்தது
ஸ்ரீபெரும்புதூர்: சாலை தடுப்பில் மோதி இளைஞர் பலி
ஸ்ரீபெரும்புதூர் அருகே எறையூர் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (20) மே 30 அன்று காலை இருசக்கர வாகனத்தில் வண்டலூர் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது நண்பர்கள் சிலர் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி அருகே அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய தனுஷ், எதிர்பாராதவிதமாக சாலை மைய தடுப்பில் மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாம்பரம் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி