
அச்சிறுப்பாக்கம் அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே அறப்பேடு என்ற இடத்தில், வார இறுதி மற்றும் காலாண்டு விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.





































