
காஞ்சிபுரத்தில் குதிரை வண்டியில் ஆர்.வி.ரஞ்சித்குமார் வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம் தொகுதி த.வெ.க வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம், காந்தி சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குதிரை வண்டியில் வந்து 'விசில்' சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சார முறை, வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் அவர் ராட்சத கிங்காங் பொம்மையுடன் ஊர்வலமாக வந்தும் வாக்கு சேகரித்தார். இதுமட்டுமின்றி காய்கறி கடையில் விற்பனை செய்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.




























