
தாம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.39 லட்சத்தில் டயாலிசிஸ் மையம் திறப்பு
தாம்பரம் மாநகராட்சி மண்டலம் 4, வார்டு 50 ரங்கநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட டயாலிசிஸ் மையம் இன்று (மார்ச் 14) திறக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டி.ஆர்.பாலு எம்பி, மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து குத்துவிளக்கேற்றினார். தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மையம் ஆறு படுக்கை வசதிகளுடன் செயல்படும்.
































