அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேக விழா

0பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் இளங்கிளிம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் உமையாட்சீஸ்வரர் சுவாமிக்கு ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தை முன்னிட்டு அன்னாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோயில் வளாகத்தில் காய்கறி பழங்களால் பிரம்மாண்ட அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர், ஆட்சீஸ்வரர் சாமிக்கு 200 கிலோ அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சமபந்தி அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி