சென்னை: போதை ஸ்டாம்ப் விற்ற இளைஞர் கைது

0பார்த்தது
சென்னை: போதை ஸ்டாம்ப் விற்ற இளைஞர் கைது
சென்னை பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மீனம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகே திங்கள்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமான இளைஞர் தீபக் (23) பிடிபட்டார். அவரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 121 போதை ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொழிச்சலூரைச் சேர்ந்த தீபக், தனியார் வங்கியில் பணிபுரிவது விசாரணையில் தெரியவந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி