மதுராந்தகத்தில் தங்க மோதிரம் வழங்கிய திமுக

70பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் படாளம் சத்யசாய் தலைமையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவையொட்டி மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று பிறந்த ஏழு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசு பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பரிசு பெற்றவர்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் பொன்சிவக்குமார், நகர மன்ற தலைவர் மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி