பல்லாவரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி டிரைவர் கைது

407பார்த்தது
பல்லாவரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: லாரி டிரைவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் திரிசூலம் பகுதியில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக லாரி டிரைவர் தாமோதரன் (24) என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தில் மே 14 அன்று கைது செய்தனர். 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி தாயுடன் வசித்து வருகிறார். தாமோதரன் சிறுமியிடம் அடிக்கடி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி தாயிடம் கூறியதை அடுத்து பல்லாவரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி