விளையாட்டு யோகாசனத்தில் அசத்தல் தங்கம் வென்ற காஞ்சி

78பார்த்தது
விளையாட்டு யோகாசனத்தில் அசத்தல் தங்கம் வென்ற காஞ்சி
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் 68வது யோகாசன போட்டி, கடந்த 16 - 19ம் தேதி வரை, நான்கு நாட்கள் பொள்ளாச்சியில் நடந்தது. 

இதில், கா. மு. சுப்பிரமணிய முதலியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும், சர்வேஷ் மற்றும் தேவேஷ் ஆகிய இரு மாணவர்களும், 14 வயது பிரிவில் பங்கேற்றனர். இரட்டையர்களான இருவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். குழு போட்டியில் இருவரும் தங்க பதக்கமும், தனிநபர் போட்டியில் சர்வேஷ் வெண்கல பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற இரு மாணவர்களையும், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் மற்றும் யோகாசன பயிற்சியாளர் யுவராஜ் ஆகியோர் பாராட்டினர்.