செங்கல்பட்டு: பொலிவு பெறும் கரிக்கிலி பறவைகள் சரணாலயம்

71பார்த்தது
செங்கல்பட்டு: பொலிவு பெறும் கரிக்கிலி பறவைகள் சரணாலயம்
செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள கரிக்கிலி பெரிய ஏரியிலும், பறவைகள் கூடுகள் கட்டி, இனப்பெருக்கம் செய்து வந்தன. அதனால், வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு இணையாக கரிக்கிலி பகுதியும், கடந்த 1989ம் ஆண்டு, பறவைகள் சரணாலயமாக உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் வேடந்தாங்கலில் பறவைகளின் சீசன் துவங்கும் போது, கரிக்கிலி சரணாலயமும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்பட்டது. வேடந்தாங்கல் சரணாலய ஏரியை விட, இரு மடங்கு பெரிய ஏரியாக கரிக்கிலி சரணாலயம் உள்ளதால், வேடந்தாங்கல் சரணாலயம் போன்ற தோற்றத்திற்கு, கரிக்கிலி சரணாலயம் மாற்றப்பட்டது. தற்போது, மீண்டும் கரிக்கிலி சரணாலயத்திற்கு பறவைகள் வரவை அதிகரிக்கும் வகையில், சரணாலயத்தில் ஏரிக்கரை பகுதிகளில் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், ஏரிக்கரை சீரமைப்பு, கரிக்கிலி சரணாலயம் பெயர் பலகை எழுதுதல் போன்ற முதற்கட்ட பணிகளை, வனத்துறையினர் துவக்கி உள்ளனர். இதனால், சரணாலயம் புதுப்பொலிவு பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி