கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு கிராமத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட வீரபத்திரன் (37) என்பவர் மின்மாற்றியில் ஏறி கம்பியைப் பிடித்து தொங்கியபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். நேற்று மதியம் 1:45 மணியளவில் கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கூடுவாஞ்சேரி போலீசார், மின்வாரிய ஊழியர்களின் உதவியுடன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் நந்திவரம் பகுதியைச் சேர்ந்தவர்.