உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர்
விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்க அறிவுறுத்தினார். அதன்படி, செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தவெக சார்பில் கிருஷ்ணா நகர், தாம்பரம் மேற்கு மற்றும் முடிச்சூர் ஊராட்சி பகுதிகளில் இன்று (மே. 28) ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. சமபந்தி விருந்தும் நடைபெற்றது. இதில் தாம்பரம் எம்எல்ஏவும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சரத்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார்.