காஞ்சி: இறந்த சகோதரரின் உடலை பார்த்து சகோதரி உயிரிழப்பு

322பார்த்தது
காஞ்சி: இறந்த சகோதரரின் உடலை பார்த்து சகோதரி உயிரிழப்பு
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த வின்சென்ட் ஆரோக்கியநாதன் (72) உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக கிழக்கு தாம்பரம் அருகே உறவினர் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அஞ்சலி செலுத்த வந்த அவரது அக்கா வேளாங்கண்ணி தாமஸ் (77), தம்பியின் உடலைப் பார்த்து கதறி அழுத நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடன் பிறந்த இருவரும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி