செங்கல்பட்டு: தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

427பார்த்தது
செங்கல்பட்டு: தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் வட்டம் கண்டிகை அடுத்த நல்லம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் குமார் (16) என்ற சிறுவன், கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது தந்தை கண்டித்ததால் மனமுடைந்த விக்னேஷ் குமார், தனது பெரியப்பா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாழம்பூர் போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி