சென்னை தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சியில், திமுகவினர் முறைகேடாக SIR படிவங்களை பூர்த்தி செய்வதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். சமுதாய நலக்கூடத்தில் படிவங்கள் நிரப்பும்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, திமுக ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகன், அதிமுக பிரமுகர் ஆதி கேசவனை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சேலையூர் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.