தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.சீ.பாலச்சந்தர், இ.ஆ.ப., அவர்கள், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் - 3, வார்டு-34, சிட்லபாக்கம் பகுதியில், ரூ.12.50 இலட்சம் மதிப்பீட்டில் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்று வரும் கூடுதல் சுற்றுச்சுவர் மற்றும் கழிப்பறைகள் கட்டுமானப் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு மூலம் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.