தாம்பரம்: ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.. கற்களை வீசி தாக்குதல்

7பார்த்தது
தாம்பரம்: ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.. கற்களை வீசி தாக்குதல்
தாம்பரம் அடுத்த அகரம்தென் ஊராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகள் மீது கட்டட உரிமையாளர்கள் கற்களை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மூன்றாவது தளத்தில் இருந்து குப்பைகளை கொளுத்தி கீழே வீசியதால் பதற்றம் நிலவியது. ஆக்கிரமிப்பை அகற்றச் சென்ற போலீசாருடன் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரன் வாக்குவாதம் செய்த நிலையில், அவரை குண்டுக்கட்டாக போலீசார் தூக்கிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி