தாம்பரம்-தூத்துக்குடி சிறப்பு ரயில் சேவை அடுத்த மாதம் 8,9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயில் திங்கட்கிழமை நள்ளிரவு 11.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். தாம்பரம்-தூத்துக்குடி சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை மாலை 3.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இந்த நீட்டிப்பு பயணிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.