போக்குவரத்து அதிகாரி தற்கொலை: கிளை மேலாளர்கள் வழக்குப்பதிவு

0பார்த்தது
போக்குவரத்து அதிகாரி தற்கொலை: கிளை மேலாளர்கள் வழக்குப்பதிவு
காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் (40), மாநகர போக்குவரத்து கழகத்தில் ஜூனியர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். கழுத்து வலி காரணமாக மருத்துவ விடுப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், கடந்த 17-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் அருகே எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன், கடந்த 3 மாதங்களாக தனக்கு பணி வழங்கக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டதாக தமிழக டி.ஜி.பி.க்கு இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி