திருச்சி-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் நிரந்தர ரயிலாக இயக்கம்

0பார்த்தது
திருச்சி-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் நிரந்தர ரயிலாக இயக்கம்
திருச்சி-தாம்பரம் இடையே தஞ்சாவூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில், நிரந்தர எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 1 முதல் இயக்கப்படும் இந்த ரயில் திருச்சியில் இருந்து அதிகாலை புறப்பட்டு தாம்பரத்தை பிற்பகல்  அடைகிறது. மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து மாலை புறப்பட்டு இரவில் திருச்சியை வந்தடைகிறது. இந்த ரயில்கள் வியாழன் முதல் திங்கள் வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும். இந்த பகல் நேர ரயிலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி