செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 27வது வார்டு குரோம்பேட்டை கோதண்டம் நகரில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வரவில்லை. இது குறித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு, சென்னை - திருச்சி ஜி. எஸ். டி. தேசிய நெடுஞ்சாலையில் வார்டு கவுன்சிலர் மகேஸ்வரி மற்றும் தமிழ்நாடு அரசை கண்டித்து இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குரோம்பேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.