சென்னை கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் எதிரே, பழச்சாறு கடைக்குச் சென்ற இரு பெண்களை, குடிபோதையில் வந்த இருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளனர். இதற்கிடையில், பெண்கள் அவர்களில் ஒருவரை கையும் களவுமாகப் பிடித்து கிண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொருவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.