
2 3, 324 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளேன் பா. ம. க. வேட்பாளர் பேச்சு
திருப்போரூர் தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது பேசிய பாமக வேட்பாளர் பாலு, தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 3,324 டாஸ்மாக் கடைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து மூடியதாகக் கூறினார். மேலும், திருப்போரூர் தொகுதியில் ஒரு டாஸ்மாக் கடை கூட இல்லாமல் செய்ய முடியும் என்றும், பொறுப்புள்ள சட்டசபை உறுப்பினராக இருப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.






























