ஒரகடம் அடுத்த பண்ருட்டியில் உள்ள தனியார் கிடங்கில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், ஒரகடம் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், சுமார் 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சாத்தான்குளத்தைச் சேர்ந்த துரைசெல்வன் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். கர்நாடகாவில் இருந்து கூரியர் மூலம் குட்காவை வரவழைத்து, கிடங்கில் பதுக்கி கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.