மாமல்லபுரத்தில் ஒரே கல்லில் 33 அடி உயர சகஸ்ரலிங்கம்

1பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தைச் சேர்ந்த 65 வயதான சிற்பக்கலைஞர் சி. லோகநாதன் ஸ்தபதி, 30 சிற்பிகளுடன் இணைந்து 3 ஆண்டுகளில் 33 அடி உயரமும் 210 டன் எடையும் கொண்ட 1008 லிங்கங்கள் பொறிக்கப்பட்ட பிரம்மாண்டமான சகஸ்ரலிங்கத்தை வடிவமைத்துள்ளார். திருநெல்வேலியில் இருந்து கொண்டுவரப்பட்ட கருங்கல்லில் உருவாக்கப்பட்ட இந்தச் சிற்பம், பீகார் மாநிலம் பாட்னா அருகே கிழக்கு சம்பாரண் என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இன்று வாஸ்து பூஜைகள் செய்யப்பட்டு, ராட்சத கிரேன்கள் மற்றும் 130 டயர் கொண்ட லாரி மூலம் பீகாருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இது உலகிலேயே இத்தகைய உயரத்தில், இத்தனை லிங்கங்களுடன் அமைக்கப்பட்ட மிக பிரம்மாண்டமான சகஸ்ரலிங்கம் ஆகும்.

தொடர்புடைய செய்தி