கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்த அபர்ணா, தனது இரண்டு குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு அகரம் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு ஸ்கூட்டரில் சென்றார். ஹோட்டலுக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றபோது, ஸ்கூட்டர் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.