காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, காஞ்சிபுரம் மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் பங்கேற்றார். பட்டியலிடப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கும் தமிழக அரசை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.