மதுராந்தகத்தில் போக்குவரத்து நெரிசலில் கார் விபத்து

162பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணியின்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார், முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி, சாலையோர தடுப்பு சிமெண்ட் கட்டையில் சிக்கியது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால், சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுராந்தகம் போலீசார் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.