போக்சோ வழக்கில் கல்லுாரி மாணவர் கைது

125பார்த்தது
போக்சோ வழக்கில் கல்லுாரி மாணவர் கைது
செங்கல்பட்டு மாவட்டம், ஒரத்தி காவல் எல்லைக்குட்பட்ட அனந்தமங்கலம் கிராமத்தில், 17 வயது கல்லூரி மாணவர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக சீண்டியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, பள்ளி மாணவியின் பெற்றோர் மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டு, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, செங்கல்பட்டு சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி