குன்றத்தூரில் லாரி மோதி மூதாட்டி பலி

82பார்த்தது
குன்றத்தூரில் லாரி மோதி மூதாட்டி பலி
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே கலெட்டிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பூசம்மாள், 75, இவர், நேற்று குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியே வந்த லாரி பூசம்மாள் மீது மோதியது. இதில், பூசம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது, அதே வழியில் சென்ற மற்றொரு லாரி, விபத்து ஏற்படுத்திய லாரியின் பின்னால் மோதியது. இதில், லாரியின் முன்பக்கம் சேதமடைந்து ஓட்டுநர் இளவரசு, 38, இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார். லாரி இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you