செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் தையூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்மணி (38) மற்றும் சவுந்தர்யா (33) தம்பதியினர் நேற்று முன்தினம் இரவு கோவளம் தனியார் மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, டோல்கேட் அருகே அதிவேகமாக வந்த கார் மோதியதில் தமிழ்மணி பரிதாபமாக உயிரிழந்தார். சவுந்தர்யா படுகாயமடைந்துள்ளார். இது குறித்து பள்ளிக்கரணை
போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.