மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு

308பார்த்தது
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூர் ஓ. எம். ஆர். சாலையில் உள்ள 4196 எண் கொண்ட அரசு டாஸ்மாக் மதுக்கடையில், பொறுப்பு கோட்டாட்சியர் பியூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மதுபாட்டில் இருப்பு, விற்பனை விபரம், கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா, பணியாளர்கள் பணியில் உள்ளனரா என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது திருப்போரூர் தாசில்தார் சரவணன், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி