தாம்பரத்தில் ஆட்டோ திருடிய நபர் கைது

0பார்த்தது
தாம்பரத்தில் ஆட்டோ திருடிய நபர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, கடந்த 12ம் தேதி தனது மனைவியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து வந்துள்ளார். சிகிச்சைக்குப் பிறகு திரும்பியபோது, ஆட்டோ திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், திருப்போரூர்-கேளம்பாக்கம் சாலையில் ஆட்டோ செல்வதைக் கண்ட உறவினர்கள், அதை மடக்கி உதயகுமார் என்பவரை திருப்போரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், உதயகுமார் ஆட்டோவை திருடியது தெரியவந்தது. திருப்போரூர் போலீசார், ஆட்டோ மற்றும் உதயகுமாரை செங்கல்பட்டு நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர். உதயகுமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி